Home உலகம் காசா நோக்கி பயணித்த படகு இஸ்ரேலிய படையினர் கட்டுப்பாட்டில்!

காசா நோக்கி பயணித்த படகு இஸ்ரேலிய படையினர் கட்டுப்பாட்டில்!

0

இஸ்ரேலின் (Israel) கடற்படை முற்றுகையை மீறி, காசா (Gaza) பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்ற ஒரு தொண்டு கப்பலை இஸ்ரேலியப் படைகள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் படகில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான பிரான்சைசேர்ந்த ரிமா ஹசன் மற்றும் உலகின் பிரபலமான சுற்றுச்சூழல் ஆதரவாளரான சுவிடனைசேர்ந்த கிரேட்டா துன்பெர்க் உட்பட்ட 12 செயற்பாட்டாளர்கள் பயணித்திருந்தனர். 

இந்த நிலையில் குறித்த படகை இன்று (09.06.2025) அதிகாலை இடைமறித்து ஏறிய இஸ்ரேலிய படையினர் அதன் தொடர்பாடலை துண்டித்தபின்னர் அதனை இஸ்ரேலிய துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது. 

மனித உரிமை செயற்பாட்டாளர்

இந்த படகில் உள்ளவர்கள் காசாவுக்குசெல்ல முடியாது முடியாது எனவும் அவர்கள் தத்தமது தங்கள் நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

கடந்த முதலாம் திகதி இத்தாலியை விட்டுப் புறப்பப்பட்ட இந்த பாய்மரப் படகு, எகிப்தில் தரித்துநின்ற பின்னர் காசாவை நோக்கிச் சென்றபோது அதில் ஜேர்மனியை சேர்ந்த ஆர்வலர் யஸ்மின் அகார் உட்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பயணித்திருந்தனர். 

இந்த கலத்தில் ஆறு பிரெஞ்சுக்காரகள் உள்னர் இந்த நிலையில் இஸ்ரேலிய கடற்பரப்புக்கு வெளியே அனைத்துலக கடற்பரப்பில் இந்த கலம் இஸ்ரேலிய படையினரால் இடைமறிக்கப்பட்டமை சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறல் என்ற கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

https://www.youtube.com/embed/fRIMdfNSMwo

NO COMMENTS

Exit mobile version