Home இலங்கை சமூகம் இஸ்ரேலின் டெல் அவிவிவாக மாறிய அறுகம் விரிகுடா: சுற்றுலா பயணியின் பகீர் தகவல்!

இஸ்ரேலின் டெல் அவிவிவாக மாறிய அறுகம் விரிகுடா: சுற்றுலா பயணியின் பகீர் தகவல்!

0

நாட்டில் அதிகரித்துள்ள இஸ்ரேலிய ஆதிக்கம் தொடர்பில் சுற்றுலா பயணியொருவர் இலங்கை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், அறுகம் விரிகுடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலா பயணியான டிஜே டாம் மோனகிள் என்பவர் காணொளியொன்றில் கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் அவர், “அறுகம் விரிகுடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கான கோரிக்கை

அத்தோடு, அறுகம் விரிகுடா இஸ்ரேலியர்களுக்கு வழங்குவதாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டதா? என்றும் அவர் அந்த காணொளியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அப்பகுதியில் உள்ள பல்வேறு உணவகங்களின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட டாம் மோனகிள், சிங்களம் அல்லது தமிழுக்குப் பதிலாக பல இடங்களில் எபிரேய மொழி பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியதோடு, சில இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவான பிரச்சார ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டியிருப்பதையும் அடையாளங்காட்டியுள்ளார்.

இதேவேளை, அருகம் விரிகுடாவில் உள்ளூர்வாசிகளைத் தடைசெய்து இஸ்ரேலியர்கள் நிகழ்வுகளை நடத்தியதையும் அவர் அதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நிலைமையை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தை மேற்கோற்காட்டி கோரிக்கையொன்றையும் டாம் மோனகிள் முன்வைத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version