Home இலங்கை சமூகம் வாகனங்களுக்கான இலக்கத்தகடு வெளியிடுவது இடைநிறுத்தம்

வாகனங்களுக்கான இலக்கத்தகடு வெளியிடுவது இடைநிறுத்தம்

0

வாகனங்களுக்கு இலக்கத்தகடு வெளியிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலக்கத்தகடு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் குறித்த பணி இடைநிறுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பான பணத்தை செலுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மாற்று வழி

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அதன் படி, இலக்கத் தகடுகள் வழங்கப்படாத காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாகன இலக்கத்தை காகிதத்தில் அச்சிட்டு காட்சிப்படுத்துவதற்கு வாகன உரிமையாளர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.   

 

Source: https://ibctamil.com/article/issuance-of-vehicle-number-plates-is-suspended-1730624275

NO COMMENTS

Exit mobile version