Home இலங்கை அரசியல் அர்ஜுன் மகேந்திரனின் கடவுச்சீட்டு விடுவிப்பு! சபையில் சர்ச்சையை கிளப்பிய சாமர

அர்ஜுன் மகேந்திரனின் கடவுச்சீட்டு விடுவிப்பு! சபையில் சர்ச்சையை கிளப்பிய சாமர

0

அர்ஜுன் மகேந்திரனின் கடவுச்சீட்டு சிக்கலை நிவர்த்திசெய்து அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்த ஒரு நீதவான் தற்போது ஒரு பணிப்பாளர் நாயகமாக உள்ளார் என  நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

கடவுச்சீட்டு விவகாரம்

“இந்த அரசாங்கம் நாய்களை கருணைக்கொலை செய்ய 100 மில்லியன் ஒதுக்கியுள்ளது. ஆனால் பிரேத பரிசோதனை செய்பவர்களுடன் சிக்கல்கள் உள்ளன.

அவர்களின் உதவித்தொகை குறைந்தது 3,000 ரூபாயாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினை எங்களைப் போன்ற கடினமான பகுதிகளை கடுமையாக பாதிக்கிறது.

வெல்லவாய நீதவான் எவ்வாறு நீக்கப்பட்டார்? கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அவர் நீக்கப்பட்டார்.

ஆனால் அர்ஜுன் மகேந்திரனை நாட்டை விட்டு வெளியேற்ற கடவுச்சீட்டு சிக்கலை நிவர்த்தி செய்த முன்னாள் நீதவான் இப்போது பணிப்பாளர் நாயகமாகிவிட்டார்.

அந்த பணிப்பாளர் நாயகத்துக்கு ஒரு சட்டம், வெல்லவாய நீதவானுக்கு ஒரு சட்டம். இப்போது நீதிபதிகள் கூட பயப்பட வேண்டியிருக்கிறது” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version