Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு

தமிழரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு

0

யாழில் (Jaffna) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக
நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது  யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா மண்டபத்தில் இன்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் மற்றும் வடக்கு மாகாண சபையின் அவைத்
தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் (C. V. K. Sivagnanam) தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அறிமுக நிகழ்வு

இதன்போது வேட்பாளர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வேட்பாளர்
அறிமுக நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள்
உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பெருமளவானோர்
கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/itak-jaffna-candidate-introductory-event-1728819649

NO COMMENTS

Exit mobile version