Home முக்கியச் செய்திகள் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்படும் முகம் …! அச்சத்தில் தமிழரசு தலமைகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்படும் முகம் …! அச்சத்தில் தமிழரசு தலமைகள்

0

வடக்கில் சுமந்திரன் கிழக்கில் சாணக்கியன் என்று தமிழரசு கட்சி முதலமைச்சர் வேட்பாளர்களை களமிறக்க தீவிர முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் எந்த சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்யமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் கூட்டம் இடம்பெறும் வேளை, சிவிகே சிவஞானம் உள்ளிட்டவர்கள் எதிர்பார்க்கும் முதலமைச்சர் வேட்பாளர் பெயரை கட்சி நிர்வாகிகள் ஒரு சிலர் முன்மொழிந்து வழிமொழிவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி மாநகர சபையில் முதல்வர் பதவிக்காக டக்ளசின் வாசல் படி ஏறிய சிவிகே, சுமந்திரனை முதலமைச்சராக்க மகிந்த ராஜபக்சவை நாட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக நீதிபதி இளஞ்செழியன் பெயரும் உச்சரிக்கப்படுகின்ற நிலையில், அவரின் பின்னால் ஏனைய கட்சிகள் சென்றால் தாமும் அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற பதற்றம் தமிழரசுக்கட்சி தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,  

https://www.youtube.com/embed/j6ZKoiHlk_s

NO COMMENTS

Exit mobile version