Home இலங்கை அரசியல் சிதறிய தமிழரசுக் கட்சி : விரக்தியின் உச்சத்தில் தமிழ் மக்கள்

சிதறிய தமிழரசுக் கட்சி : விரக்தியின் உச்சத்தில் தமிழ் மக்கள்

0

தற்போது தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு அணிகள் உள்ள நிலையில் அவை கட்சியின் கொள்கை மற்றும் ஒற்றுமை என்பவற்றை முற்றாக சிதைக்கின்றது என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை தலைவர் கலாநிதி ரி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் நேர்காணலொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியின் இதற்கு முதல் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் ஆளுமை குறைபாடுகள் தான் தமிழரசு கட்சியின் இந்த நிலைக்கு காரணம்.

என்னை பொறுத்தவரைக்கும் அவர் ஒரு சரியான தலைவராக இருக்கவில்லை, அவர் ஒரு சரியான கட்சி தலைவரா இருந்திருந்தால் இந்த பிளவுகள் ஏற்பட்டிருக்காது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கட்சிக்குள்ளான பிளவுகள், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு, தமிழ் அரசியல் களம் மற்றும் பலதரப்பட்ட நடைமுறை அரசியல் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/PoCjdkDJPAA

NO COMMENTS

Exit mobile version