Home இலங்கை சமூகம் முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ் அரசுக்கட்சி

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ் அரசுக்கட்சி

0

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த
இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ்
அரசுக்கட்சியினரால் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.

அஞ்சலி நிகழ்வு

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகளின் தவிசாளர்கள்,
பிரதேசசபை உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் இந்த
அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

மேலும் இதன்போது குறித்த இராணுவத்தின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கைத்
தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்
சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version