Home உலகம் இத்தாலியில் சாலையில் விழுந்து பற்றியெரிந்த விமானம்: இருவர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து பற்றியெரிந்த விமானம்: இருவர் பலி

0

இத்தாலியில் (Italy) சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற வாகனங்கள்

விமானத்தின் தீப்பிழம்புகள் அந்த நேரத்தில் நெடுஞ்சாலையில் கடந்து சென்ற இரண்டு வாகனங்களுக்கும் பரவியுள்ளது.

இதையடுத்து, அங்கிருந்த மற்ற வாகனங்கள் உடனே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை

அத்தோடு, மற்றொரு நபர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவசரகால குழுவினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்ததுடன் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள், வழக்கறிஞர் (75) செர்ஜியோ ரவாக்லியா மற்றும் அன்னா மரியா(50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version