Home உலகம் மகிழ்ச்சியின் உச்சத்தில் அமெரிக்க மக்கள்.! ட்ரம்பின் அறிவிப்பால் அடித்த ஜெக்பொட்

மகிழ்ச்சியின் உச்சத்தில் அமெரிக்க மக்கள்.! ட்ரம்பின் அறிவிப்பால் அடித்த ஜெக்பொட்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கியதிலிருந்து பல முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில் உலக நாடுகளை கவனிக்க வைத்த தீர்மானமாக வெளிநாட்டு வரி விதிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அவர் விதித்த புதிய வரிகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. சில நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் அந்த வரிகளை குறைத்துக் கொண்டன.

பிற நாடுகளின் மீதான வரி

இதேவேளை, அதிக வருமானம் பெறுபவர்களைத் தவிர்த்து, மற்ற அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் ஒருமுறை நிதி உதவியாக 2,000 அமெரிக்க டொலர் (சுமார் ரூ.1.77 லட்சம்) வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Image Credit: Fortune

அமெரிக்கா பிற நாடுகளின் மீதான வரி வசூலின் மூலம் பெறும் வருவாயிலிருந்து இந்த தொகை வழங்கப்படும் என்றும் அவர் முன்பே தெரிவித்திருந்தார்.

மகிழ்ச்சியில் அமெரிக்க குடிமக்கள்

தனது சமூக வலைதளப் பதிவில் ட்ரம்ப்,
“வரிகளை எதிர்ப்பவர்கள் அறியாமையுடன் செயல் படுவோர். தற்போது அமெரிக்கா உலகின் மிகச் செழிப்பான, மதிப்புக்குரிய நாடாக உள்ளது. பணவீக்கம் குறைந்து, பங்குச் சந்தை பெரிதும் வளர்ந்துள்ளது.

இதன் பயனாக ஒவ்வொரு குடிமகனுக்கும் 2,000 டொலர் வழங்கப்படும். ஆனால், இந்த நிதி உயர்ந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படாது,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் அமெரிக்க குடிமக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version