Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல் : சஜித்திற்கு ஆதரவு வழங்கும் ஜாக்சன் அந்தோனியின் மனைவி

ஜனாதிபதி தேர்தல் : சஜித்திற்கு ஆதரவு வழங்கும் ஜாக்சன் அந்தோனியின் மனைவி

0

இலங்கையின் பழம்பெரும் பிரபல நடிகரும், சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவருமான காலஞ்சென்ற ஜாக்சன் அந்தோனியின் (Jackson Anthony) பாரியாரான குமாரி முனசிங்க (Kumari Munasinghe) ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார்.

2024 சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) தனது ஆதரவை வழங்கும் நோக்கில் இன்று (18) இணைந்து கொண்டார் என குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல்

இதேவேளை மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் (Mangala Samaraweera) சகோதரியின் மகளான சஞ்சல குணவர்தன (Sansala Gunawardana) ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) நேற்று (17)இணைந்து கொண்டார்.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பிரச்சார கூட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version