Home இலங்கை சமூகம் யாழில் பெரும் சோகம் – பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழில் பெரும் சோகம் – பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர் இன்று (16.2.2024) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital
) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் நேர்மையாக துடிப்புடன் மிகச் சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதி மக்களுக்கு வழங்கி வந்தவர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் – பிரதீபன்

NO COMMENTS

Exit mobile version