Home முக்கியச் செய்திகள் செம்மணியில் சிறுமியின் ஆடை முழுமையாக மீட்பு

செம்மணியில் சிறுமியின் ஆடை முழுமையாக மீட்பு

0

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி (Chemmani mass graves investigation) இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆடையின் சில பகுதிகள் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டிருந்தன.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

42 மனித எலும்புக்கூடுகள்

மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம்
நாள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தொல்லியல் துறை
பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின்
பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அழ்வுகளின் போது இதுரை 42 மனித
எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது.

சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்டு
புதிதாக அகழப்படும் பகுதியில் சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும்
அகழ்ந்தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version