Home முக்கியச் செய்திகள் ஈவிரக்கமின்றி கொன்று புதைக்கப்பட்ட மக்கள்…! செம்மணியில் மீண்டும் ஆரம்பமாகும் அகழ்வு

ஈவிரக்கமின்றி கொன்று புதைக்கப்பட்ட மக்கள்…! செம்மணியில் மீண்டும் ஆரம்பமாகும் அகழ்வு

0

அரியாலை (செம்மணி) மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம்
அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு
அமைய அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.

குழந்தைகளின் மனித எலும்பு எச்சங்கள்

முதல் கட்ட அகழ்வின் முடிவில் 3 குழந்தைகளின் மனித எலும்பு எச்சங்கள்
உட்பட 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை 45 நாட்களுக்கு முன்
னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அகழ்வு பணிக்கான செலவின பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான
நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளன.

இதனால் இன்று வியாழக்கிழமை முதல் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள்
முன்னெடுக்கப்படவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version