சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடன் வேலணை – சாட்டி கடற்கரையோரத்தில்
காணப்படும் சாதாளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாட்டி கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையை
மேற்கொள்வதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார்
தெரிவித்துள்ளார்.
சாதாளைகள்
அத்துடன் குறித்த நடவடிக்கையின் போது அகற்றப்படும் சாதாளைகள், தாவரங்களுக்கான
சிறந்த பசளையாக பயன்படுத்தக் கூடியதாக இருப்பதால் குறித்த சாதாளையை
மிகக்குறைந்த விலைக்கு பொதுமக்களிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னராக குறித்த செயற்பாட்டை பிரதேச சபை
மேற்கொள்ளவுள்ளதால் கடற்சாதாளைகளைப் பெற விரும்புவோர் வேலணை பிரதேச சபையின்
தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உரிய கட்டணங்களைச் செலுத்தி தேவையான
கடற்சாதாளைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
