Home இலங்கை சமூகம் இணைய வழியில் நடைபெறவுள்ள யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

இணைய வழியில் நடைபெறவுள்ள யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

0

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்  இணைய
வழியில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (1) இரவு 8 மணிக்கு இந்தக் கூட்டமானது இணைய வழியில் நடைபெறவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் வரையான கணக்கு அறிக்கையில் ஒதுக்கிய 56
மில்லியன் ரூபா மற்றும் விசேட வீதி அமைப்புக்கான நிதிகள்
என்பவற்றுக்கு அனுமதியைப் பெறும்
நோக்கிலேயே இரவோடு இரவாக இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இணைய வழி

இந்தக் கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் இணைய வழியில் இணைந்துகொள்வதற்கான
எந்தவொரு ஏற்பாட்டையும் மாவட்ட செயலகம் மேற்கொள்ளவில்லை.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமும் ஏற்கனவே இணைய
வழியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version