Home இலங்கை சமூகம் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கள ஆய்வு

யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கள ஆய்வு

0

எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக
வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்
மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ். மாவட்ட பதில்
செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் இன்று கள ஆய்வை
மேற்கொண்டார்.

இதன்போது யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க
கலந்து கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.

ஆய்வு செய்யப்பட்ட விடயம்

இந்தக் கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு
வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள்
ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மேற்படி கள ஆய்வில் பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன், சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவாத்தாட்சி
அலுவலர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

NO COMMENTS

Exit mobile version