யாழ் (Jaffna) காங்கேசன்துறைக் கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படைச் சிப்பாயின் இறுதி
நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்றொழிலாளர்கள் குருநாகலுக்கு சென்றுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (25) அதிகாலை காங்கேசன்துறைக் கடற்பரப்புக்குள்
ஊடுருவிய இந்திய கடற்றொழிலாளர்களைக் கைது செய்ய முற்பட்ட வேளை இடம்பெற்ற மோதலில்
உயிரிழந்த காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசேட படகுகள் அணியில் கடமையாற்றும்
ரத்நாயக்கவின் (வயது 40) இறுதி நிகழ்வு இன்று (27) குருநாகலில்
இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கடற்படைச் சிப்பாயின் பூதவுடலுக்கு அஞ்சலி
செலுத்தவே யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 3 பஸ்களில்
கடற்றொழிலாளர்கள் பயணிக்கின்றனர்.
