Home இலங்கை சமூகம் தமிழுக்கு அகராதியை கொடுத்தது யாழ்ப்பாணம்: உலக சிலம்பத் தலைவர் பெருமிதம்

தமிழுக்கு அகராதியை கொடுத்தது யாழ்ப்பாணம்: உலக சிலம்பத் தலைவர் பெருமிதம்

0

உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம்(jaffna) என்பதில் தான் பெருமை
அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன்  தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(3) யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர்
விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் இடமாற்றம்!

யாழில் தூய்மையான செழுமையான தமிழ்

அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சிலம்பம் போட்டியை முதல்முறையாக 5
நாடுகளின் பங்கு பற்றுதலுடன் யாழில் நடாத்தப்படவுள்ளதை இட்டு பெருமை
அடைகிறேன்.

யாழ்ப்பாணம் தமிழக்கு அகராதி கொடுத்த இடம் இங்கு பேசுகின்ற தமிழ் தூய்மையான
செழுமையான தமிழ் அதையிட்டு நான் பெருமை அடைகிறேன்.

அவ்வாறான ஒரு இடத்தில் உலக சிலம்பம் சங்கத்தின் உறுப்பினர்களும் வெளிநாட்டு
மாணவர்களும் இணைந்து எமது பாரம்பரிய கலைப் போட்டியை நிகழ்த்தவுள்ளோம்.

பொது வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: ஜூனுக்குப் பின்பே அதிகாரபூர்வ அறிவிப்பு

சர்வதேச சிலம்பம் போட்டி

இலங்கை சிவலீமன் சங்கத்துடன் இணைந்து உலக சிலம்பம் சங்கம் யாழ்ப்பாணம்
துரையப்பா விளையாட்டு அரங்கில் சர்வதேச சிலம்பம் போட்டிகளை  நடாத்தப்பட உள்ளது.

இந்நிகழ்வானது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை(4) காலை 8 மணிக்கு
ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்று பரிசில் வழங்கும்
நிகழ்வுகள் இடம்பெறும்.

ஆகவே குறித்த போட்டியில் பங்கு பெற்றும் மாணவர்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ்
வழங்கப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுவேட்பாளர் விடயத்தில் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்: ஜனா எம்.பி. திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

NO COMMENTS

Exit mobile version