யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்றையதினம்(21) மதியம் 1:30 மணியளவில் பதிவாகியுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதாக கடற்படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்கப்பட்ட கைக்குண்டினை கடற்படையினர் மருதங்கேணி பொலிசாரிடம்
ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார்
மேற்கொண்டு வருகின்றனர்
