Home இலங்கை சமூகம் வடக்கில் ஏற்றுமதிகளுக்கு வாய்ப்பு : வர்த்தக தொழில்துறை மன்றம் நம்பிக்கை

வடக்கில் ஏற்றுமதிகளுக்கு வாய்ப்பு : வர்த்தக தொழில்துறை மன்றம் நம்பிக்கை

0

வடபகுதி மக்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வர்த்தக திருவிழாவான யாழ்ப்பாண (Jaffna) சர்வதேச வர்த்தக கண்காட்சி இவ்வருடமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கண்காட்சி இம்மாதம் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

15 ஆவது வருடமாக நடைபெறும் இந்த கண்காட்சி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

வடக்கிற்கான உங்கள் நுழைவாசல் என்ற தொனிபபொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், குறித்த கண்காட்சி முன்னெடுக்கப்படுவதற்கான காரணம் மற்றும் இதனால் ஏற்படப்போகும் மாற்றம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐ.பி.சி தமிழின் இன்றைய களம் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/MzeV9b-tlcY

NO COMMENTS

Exit mobile version