Home இலங்கை சமூகம் குப்பைகளால் அழகிழக்கும் யாழ்ப்பாணம்: வெளியாகிய ஆதாரக்காணொளி

குப்பைகளால் அழகிழக்கும் யாழ்ப்பாணம்: வெளியாகிய ஆதாரக்காணொளி

0

மனித பயன்பாட்டுக் கழிவுகளை வீதியில் கொட்டுவதால் அழகிழக்கும் சூழலின் தன்மை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வியாபித்துள்ளது.

ஒழுங்கற்ற கழிவு முகாமைத்துவமின்மையும், இவ்வாறான மக்களில் பாராமுக செயற்பாடும் சூழல் மீது தாக்கத்தை செலுத்துவதோடு, வீதியோர பயணிகள் மற்றும் சுற்றுலாத்துறையினரை முகம் சுழிக்க வைக்கிறது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில்(Jaffna) இருந்து வட்டுக்கோட்டை செல்லும் பிரதான வீதியில் இவ்வாறான கழிவுகள் வீதி ஓரங்களில் கொட்டிக்கிடக்கும் நிலையை அவதானிக்க கூடியதாய் இருந்தது.

மக்களின் அன்றாட தேவைக்காக பயன்படும் இந்த பிரதான வீதி ஓரங்களில் இவ்வாறு குப்பைகள் கொட்டப்பட்டு கிடப்பது, சாரதிகளையும், பயணிகளையும் அசௌகரியங்களுக்கு உள்ளாகக்கூடும்.

தற்போது நாட்டில் பொதுதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பலத்தை காண்பிக்கும் நகர்வுகளை மேற்கொள்ளும் தலைமைகள் இவ்வாறான, அடிப்படை விடயங்களை கவனிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.

மேலும் உயர்மட்ட அதிகாரிகள் இது தொடர்பில் பொறுப்பற்ற போக்கை கொண்டுள்ளார்களா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இந்நிலையில், நகரமயமாக்கலில் கழிவகற்றலும் பிரதான ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதை கருத்திலெடுத்து பயன்பாடுடைய இயற்கை அமைப்புக்களை பேண பொருத்தமான செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version