Home இலங்கை குற்றம் யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு: சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை

யாழில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்மக் குழு: சிசிரிவி காணொளி தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை

0

யாழ்ப்பாணம் (Jaffna) கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குள் நுழைந்த குழுவொன்று 30 இலட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம், நேற்று (16.01.2025) மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது. 

சிஐடி பொலிஸ்… 

சம்பவத்தின் போது, குற்ற புலனாய்வு பிரிவு (சிஐடி) என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த
மூவரடங்கிய குழு சோதனை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். 

இதன்போது, அக்குழுவினர் கடையில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

மேலும், கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version