Home இலங்கை சமூகம் யாழ் – மானிப்பாய் பிரதேச சபை அசமந்தம்: மக்கள் கடும் விசனம்!

யாழ் – மானிப்பாய் பிரதேச சபை அசமந்தம்: மக்கள் கடும் விசனம்!

0

யாழ்ப்பாணம்(Jaffna) – மானிப்பாய், மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் விபத்துக்களும் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மக்கள் மேலும் தெரிவிக்கையில், “அந்த வீதிக்கு அருகே வாழும் குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்கள்

அத்துடன், பிளாஸ்ரிக், தகரப் பேணிகளில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

நீரோடும் கால்வாய்களும் சீராக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் மழைவெள்ளம் தேங்கி நிற்கின்றது.

வீதிகளில் உள்ள மின் விளக்குகளும் ஒளிர்வதில்லை. அதனை பிரதேச சபை திருத்தம் செய்வதும் இல்லை. 

இந்நிலையில், இது பற்றி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சபேசனுக்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர் அதற்கு இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. 

மேலும், மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத காலத்தில் அவரது செயற்பாடுகள் விரும்பத் தக்கதாக இல்லை.”என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version