பிரபல வர்த்தகர் ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் காணொளி பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் காவல்துறையினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாண காவல்துறை பிராந்தியத்தின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் மேற்படி வர்த்தகர் யாழ்ப்பாணம் காவல்நிலையத்துக்கு நேற்று(22) அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
பெரும் அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த நபர் ஒருவர் தன்னை கோடீஸ்வரராக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய நிலையில், தன்னை தியாகி என அவரே அழைத்து வருகின்றார்.
இவர், பெருந்தொகை பணத்தை தனது காலில் போட்டு மிதித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சிறிலங்கா மத்திய வங்கியின் சட்டங்களுக்கு அமைய நாணயத்தை சேதப்படுத்துவது பாரிய குற்றமாகும்.
எனவே, இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.