Home இலங்கை குற்றம் யாழில் நீண்ட காலமாக போதைபொருள் விற்பனை செய்த சந்தேகநபர் கைது

யாழில் நீண்ட காலமாக போதைபொருள் விற்பனை செய்த சந்தேகநபர் கைது

0

யாழ்ப்பாணம் – கற்குளம் பகுதியில் நேற்றையதினம் (22)  ஒரு கிலோ கஞ்சா கலந்த
மாவாவுடன் 26 வயதுடைய சந்தேகநபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நீண்ட காலமாக
கஞ்சா கலந்த மாவா விற்பனை செய்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணைகள் 

யாழ்.மாவட்ட பொலிஸ்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பொலிஸ்
காவலரணில் கடமையில் இருந்த பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/jaffna-man-held-for-selling-drug-flour-1750658644

NO COMMENTS

Exit mobile version