Home இலங்கை சமூகம் அமெரிக்க கம்பனியில் ஒன்லைன் வர்த்தகம்: யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

அமெரிக்க கம்பனியில் ஒன்லைன் வர்த்தகம்: யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

0

யாழில் (Jaffna) தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்
– கட்டுவன் பகுதியை சேர்ந்த தங்கராசா ராஜ்குமார் (வயது 30) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க கம்பனி 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் அமெரிக்க (America) கம்பனி ஒன்றில் ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு
வந்துள்ளார்.

குறித்த வர்த்தகமானது சரிவடைந்துள்ளதால் அவருக்கு
ஒருகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பல இலட்சம் 

இதனால் அவர் மனவிரக்தியடைந்த நிலையில் தவறான முடிவெடுத்து
உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இவர் ஒருதடவை பல இலட்சம் ரூபா நஷ்டத்தை சந்தித்த நிலையில்
அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த நஷ்டத்தில் இருந்து அவரை மீட்டமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version