Home இலங்கை சமூகம் தீருவில் திடலில் மாவீரர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வரும் தமிழ் மக்கள்

தீருவில் திடலில் மாவீரர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வரும் தமிழ் மக்கள்

0
புதிய இணைப்பு

யாழ் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் முன்னெடுக்ககப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று (27) மாலை 6:05 மணிக்கு நினைவு ஒலி
எழுப்பப்பட்டு பிரதான பொதுச் சுடர் ஏற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரனின் சகோதரன் பிரதான
சுடரை ஏற்றி வைக்க ஏனையோர் தமது உறவினருக்கான நினைவுச் சுடர்களை ஏற்றி மலர்
தூவி, மலர் மாலை அணிவித்து கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர்.

மேலும், கொட்டும்
மழையிலும் பல நூற்றுக் கணக்கானோர் கலந்து தமது அஞ்சலிகளைச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த மறவர்களை உணர்வெழுச்சியுடன் பூசிக்கும் மாவீரர் நாள் இன்றாகும்.

இந்த நிலையில், யாழ்.வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டுக்கும் மழைக்கும் மத்தியிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இதன்போது, நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து வந்து தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் செலுத்தி வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/jaffna-maveerar-naal-2024-1732716290

NO COMMENTS

Exit mobile version