யாழில் பொலிஸ்
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ்
போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்
யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 1 கிராம் 200 மில்லிகிராம் அளவுடைய ஐஸ் போதைப்பொருளுடன் யாழ். மணியந்தோட்டத்தை சேர்ந்த 21வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
