Home இலங்கை சமூகம் யாழ். தையிட்டியில் போராட்டம்! தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

யாழ். தையிட்டியில் போராட்டம்! தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

0

யாழ். தையிட்டி பகுதியில் இன்றையதினமும் போராட்டம் முன்னனெடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அனுமதி மறுப்பு

அந்தவகையில், பொசன் போயா தினமான இன்றையதினமும்(10) அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இடத்திற்கு சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்டபட்டுள்ளதுடன் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று காலை முதல் குறித்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version