கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் சாவகச்சேரி நுணாவில்
பகுதியில் வைத்து வழிமறிக்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட
சுண்ணக்கல்லை ஏற்றிச்சென்ற கனரகவாகனம் 09/01 வியாழக்கிழமை சாவகச்சேரிப் பொலிஸ்
நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மேற்படி சுண்ணக்கல்லை ஏற்றி வந்த வாகனத்தில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான
பொருட்களை மறைத்து எடுத்துச் சென்றிருகலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட
நிலையில் சாவகச்சேரிப் பொலிஸார் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சுண்ணக்கற்களை
வாகனத்தில் இருந்து அகற்றி சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்டது
மேற்படி சோதனை நடவடிக்கையின் போது எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருட்களும்
இல்லாத நிலையில் பொலிஸார் கனரக வாகனம் மற்றும் சுண்ணக்கற்களை சாவகச்சேரி
நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ளனர்.