Home இலங்கை சமூகம் யாழில் மாணவியிடம் தவறான முறையில் நடந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி

யாழில் மாணவியிடம் தவறான முறையில் நடந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்ற ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது கோப்பாய் (Kopay) காவல்துறையினரால் நேற்றைய தினம் (22.01.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயது மாணவி ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதாக காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல்நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரான  52 வயதான குறித்த ஆசிரியர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரான ஆசிரியரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version