Home இலங்கை சமூகம் தையிட்டி விகாரை களத்தில் பதற்றம் – பொலிஸாரால் அகற்றப்பட்ட கூடாரங்கள்!

தையிட்டி விகாரை களத்தில் பதற்றம் – பொலிஸாரால் அகற்றப்பட்ட கூடாரங்கள்!

0

யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த போராட்ட களத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் குறித்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்றும் (03), இன்றும் (04) தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடத்தப்படுகின்றது.

நேற்று மாலை 04 மணி தொடக்கம் மாலை06 மணி வரையும், பெளர்ணமி தினமான இன்று காலை 06 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையும் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version