Home இலங்கை சமூகம் யாழ். கொழும்பு தொடருந்து சேவை – வெளியான அறிவித்தல்

யாழ். கொழும்பு தொடருந்து சேவை – வெளியான அறிவித்தல்

0

விசேட தொடருந்து சேவையை முன்னெடுப்பதற்கு தொடருந்து திணைக்களம் (Department of Railways) நடவடிக்கை எடுத்துள்ளது.  

குறித்த தொடருந்து சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், கொழும்பு (Colombo) கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலும் இந்த விசேட தொடருந்து சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட வார விடுமுறை

நீண்ட வார விடுமுறை மற்றும் அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல விசேட தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலும் குறித்த தொடருந்து சேவை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது  

அதன்படி, இந்த விசேடதொடருந்து சேவைகள் இன்று முதல் 13 ஆம் திகதி வரை இயக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version