Home இலங்கை சமூகம் இன்று முதல் தொடருந்து நேர அட்டவணைகளில் திருத்தம்

இன்று முதல் தொடருந்து நேர அட்டவணைகளில் திருத்தம்

0

கொழும்பு (Colombo) – கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட்டுவரும் தொடருந்துக்கான நேர அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தத் திருத்தம் நேற்று (20) முதல் நடைமுறைக்கு வருவதாக தொடருந்து திணைக்கம் (Department of Railways) தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட தொடருந்து சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக தொடருந்து சேவை

பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கு காரணமாக குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்களின் வசதிக்காக தொடருந்து திணைக்களம் கடந்த 19 ஆம் திகதி முதல் பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக தொடருந்து சேவையை ஆரம்பித்தது.

இந்நிலையில், பொலனறுவை – மானம்பிட்டி பாதையின் நீர் வடிந்ததால், இன்று காலை முதல் இந்த தொடருந்து சேவையை காவல்துறையினர் போக்குவரத்துக்கு திறந்து விட்டதால், அதை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் திருத்தம் செய்யப்பட்ட தொடருந்து அட்டவணையை கீழே காணலாம்.

NO COMMENTS

Exit mobile version