Home இலங்கை சமூகம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் சங்கம்

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் சங்கம்

0

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்வைத்தே இந்த போராட்டம் இடம்பெற உள்ளது.

குறித்த விடயத்தை தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் (K.T. Duminda Prasad) தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சனை

அந்தவகையில், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

இன்று (19) காலை தொடருந்து அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version