Home முக்கியச் செய்திகள் யாழிலிருந்து சென்ற பேருந்து சாரதி மீது வாள்வெட்டு : வீதியில் அந்தரித்த பயணிகள்

யாழிலிருந்து சென்ற பேருந்து சாரதி மீது வாள்வெட்டு : வீதியில் அந்தரித்த பயணிகள்

0

யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) முல்லைத்தீவு (Mullaitivu) நோக்கிச் பயணித்த பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு (07.02.2025) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து – முல்லைத்தீவு (Mullaitivu) நோக்கி அரச பேருந்து ஒன்று பயணித்துள்ளது.

மேலதிக விசாரணை

இதன் போது அடையாளம் தெரியாத நபர்கள் அரச பேருந்தின் சாரதி மீது கூறிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த பேருந்தின் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், பேருந்தில் பயணித்த பயணிகள் நடு வீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Like This 


https://www.youtube.com/embed/LxqTcE7GPZ0

NO COMMENTS

Exit mobile version