Home இலங்கை சமூகம் யாழ். ராணி தொடருந்து சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

யாழ். ராணி தொடருந்து சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

0

யாழ். ராணி தொடருந்து சேவை மறு அறிவித்தல் வரை நடைபெறாது என தொடருந்து திணைக்களம் (Department of Railways)  அறிவித்துள்ளது.

தொடருந்தின் என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த தொடருந்து சேவையை நடாத்த முடியாதிருப்பதாக பிராந்திய தொடருந்து முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்

குறித்த தொடருந்தை இரத்மலானைக்கு அனுப்பியே சீர்செய்ய முடியும் என்றும், அதற்கு எத்தனை நாள் எடுக்கும் எனக் கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) தினமும் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்துக்கு தொழில் நிமித்தம் பயணிக்கும் அரச சேவையாளர்கள், தனியார்துறை பணியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்களின் நலன் கருதி, 2022 ஜுலை மாதம் 11ம் திகதி இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version