Home இலங்கை சமூகம் யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதி தெரிவு

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதி தெரிவு

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த
வைத்தியக் விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சித்த மருத்துவ பீடச்சபை
கூட்டத்தில் நடாத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 04 மேலதிக வாக்குகளைப்
பெற்று விவியன் சத்தியசீலன் பீடாதிபதியாகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் சித்த மருத்துவ அலகாகச்
செயற்பட்டு வந்த சித்த மருத்துவ கற்கை அலகு கடந்த ஜூலை 26 ஆம் திகதி பீடமாகத்
தரமுயர்த்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

சித்த மருத்துவ பீடத்தில் நஞ்சியல் மற்றும் பரம்பரை மருத்துவம், மனித
உயிரியல், சமூகநல மருத்துவம், சிரோரோகமும் அறுவை மருத்துவமும், நோய் நாடல்
சிகிச்சை, குணபாடம், மூலதத்துவம், குழந்தை மற்றும் மகளிர் மருத்துவம்ஆகிய
கற்றல் துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சித்த மருத்துவ அலகு பீடமாகத் தரமுயர்த்தப்பட்ட நாளில் இருந்து முன்னாள்
துறைத் தலைவரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான விவியன்
சத்தியசீலன் பதில் பீடாதிபதியாகச் செயற்பட்டு வந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version