Home இலங்கை சமூகம் யாழில் பல்கலைக்கழக ஊழியர்களின் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பம்!

யாழில் பல்கலைக்கழக ஊழியர்களின் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பம்!

0

யாழ் பல்கலைக்கழக (University of Jaffna) ஊழியர் சங்கத்தினர் பல்கலைக்கழக பிரதான வாயிலை மூடி
சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டமானது இன்றைய தினம் (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்பள நிலுவை மற்றும் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி 49 ஆவது நாளாக நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு
வருகிறது.

சத்தியாக்கிரக போராட்டம்

இந்த நிலையில், நேற்று முதல் ஏனைய பல்கலைக்கழகங்களில் சத்தியாக்கிரக போராட்டம்
ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, யாழ் பல்கலைக்கழகத்திலும் இன்று
முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் தங்கராஜா தமது
கோரிக்கைகள் மற்றும் போராட்டம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/jaffna-university-staff-union-protest-1718893657

NO COMMENTS

Exit mobile version