2023ஆம் ஆண்டை விட கடந்த வருடம் அதிகளவான இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்த சதவீதம்
கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
