Home இலங்கை சமூகம் இரண்டாவது நாளாக தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்

இரண்டாவது நாளாக தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்

0

புதிய இணைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (25) தொடர்கின்றது.

மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள
வகுப்புத்தடைகளை நீக்க
வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உணவு
தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணப்
பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர்கள் இன்று (24.01.2025) காலவரையறையற்ற
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக முன்றலில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் பின்வரும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தியுள்ளனர்.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் 

1. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை
உடன் நிறுத்து.

2. ⁠போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின்
அடிப்படை உரிமைகளை உறுதி செய்.

3. ⁠விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்.

4. ⁠மாணவர்களின் கற்றலுக்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களுக்கு உடனடி
நிவாரணம் வழங்கு.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத் தவிர்ப்புப்
போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் – கஜிந்தன் 



https://www.youtube.com/embed/Qy1ctM59M1U

NO COMMENTS

Exit mobile version