Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி கைது

0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

போலி கடவுச்சீட்டு உள்ளிட்ட போலி ஆவணங்களை காட்டி டுபாய் வழியாக இத்தாலிக்கு செல்ல முற்பட்ட பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் போலி கடவுச்சீட்டு போலி போர்டிங் பாஸ் மற்றும் போலி குடிவரவு முத்திரை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடியகல்வு அதிகாரி

கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தவறான தகவல்களை வழங்கியதற்காகவும், வெளிநாட்டு விசா வைத்திருந்ததற்காகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version