Home இலங்கை சமூகம் யாழில் மர்மமாக உயிரிழந்த இளைஞர் : உண்மைகளை அம்பலப்படுத்தும் தாய்

யாழில் மர்மமாக உயிரிழந்த இளைஞர் : உண்மைகளை அம்பலப்படுத்தும் தாய்

0

யாழில் (Jaffna)  கடந்த 17 ஆம் திகதி யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து சிலுசன் என்ற 23 வயதுடைய
இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்திருந்தார்.

குறித்த இளைஞன், குளத்தில் தாமரைப்பூ பறித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

தற்போது உயிரிழந்த இளைஞர் மரணம் குறித்தும் அவர் மரணித்த விதம் குறித்தும் சமூக வலைதளங்களிலும் அந்த தரப்பு மக்களிடமும் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, இளைஞரின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும் இது குறித்து மேலதிக விசாரணைகள் விரிவாக நடத்தப்பட வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும்
உறவினர்களும் தற்போது வெளிப்படுத்தியுள்ள நிலையில், இதனை கீழ்வரும் காணொளியில் காணலாம்,

https://www.youtube.com/embed/bxFVMvzoT1Y

NO COMMENTS

Exit mobile version