ஜனநாயகன்
One Last Time, இப்படி படிக்கும் போதே கஷ்டமாக இருக்கும்.
நடிகர் விஜய் ஆரம்பத்தில் அப்பாவின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தாலும் கடின உழைப்பு போட்டு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது முன்னணி நடிகராக இருக்கிறார்.
இவரது திரைப்படம் என்றாலே வியாபாரமோ, வசூலோ பெரிய அளவில் இருக்கும். எச்.வினோத் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்தி இந்த ஜனநாயகன் படம் தயாராகியுள்ளது.
தெலுங்கு சினிமா
பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் ஜனநாயகன் படம் அடுத்த வருடம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
படத்தை காண ரசிகர்களும் பெரும் ஆவலாக உள்ளனர். இப்போது படத்திற்கான வியாபாரம் சூடு பிடிக்க நடக்க தெலுங்கு சினிமாவில் இருந்து ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் தெலுங்கில் ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர், ஆனால் விநியோகஸ்தர்களுடன் பேச்சு வார்த்தைக்கு பிறகு ஜனநாயகன் படத்தை வாங்குவதில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.
ஏனெனில் சங்க்ராந்தி தினத்தில் சித்தாரா நிறுவனத்தின் Anaganaga Oka Raju படம் ரிலீஸ் ஆவதால் தேவையில்லாத பிரச்சனை வரும் விலகியுள்ளனர்.
நாக வம்சி வெளியேறியுள்ளதால் அடுத்த விநியோகஸ்தர் பிடிப்பதற்குள் கொஞ்சம் கஷ்டம் என தெலுங்கு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
