Home சினிமா உயிர் பிழைத்தாரா சக்தி? ஆதி குணசேகரன் கைது! எதிர்நீச்சல் 2 சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்

உயிர் பிழைத்தாரா சக்தி? ஆதி குணசேகரன் கைது! எதிர்நீச்சல் 2 சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்

0

உயிர் பிழைத்தாரா?

எதிர்நீச்சல் சீரியலில் பல போராட்டங்களை கடந்து தனது கணவர் சக்தியை அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்து, அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டார் ஜனனி.

ஆனால், சக்திக்கு நாடி துடிப்பு இல்லை என மருத்துவர் கூறுகிறார். ஆனால், ஜனனி நம்பிக்கையோடு இருக்க, மருத்துவர் சக்தியை பரிசோதனை செய்து பார்க்கிறார். சிகிச்சையில் சக்தி காப்பாற்றப்பட்டு உயிர் பிழைக்கிறார்.

சக்தியை எப்படியாவது ஜனனி காப்பாற்றிவிட மாட்டாரா என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகியுள்ளது.

ஆதி குணசேகரன் கைது?

இந்த நிலையில், சக்தியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஜனனிக்கு நீதிபதி ஒருவர் உதவி செய்தார். தற்போது அந்த நீதிபதியிடம் தங்களுக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் ஜனனி கூற, ஆதி குணசேகரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிடுகிறார்.

அதற்காக தனிப்படை ஒன்றையும் அமைக்கிறார். இதுநாள் வரை ஆதி குணசேகரனின் கை ஓங்கியிருந்த நிலையில், தற்போது ஜனனி பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கிறார். இனி வரும் எபிசோட்கள் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

NO COMMENTS

Exit mobile version