Home இலங்கை சமூகம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நியமிக்கப்பட்ட மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகியுள்ளார். 

ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த ஜயந்த திலக்கரத்னவே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

இவர் கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்கள்

எனினும், தனது பதவி விலகலுக்கான காரணத்தை அவர் இதுவரை வெளிப்படுத்தாத நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version