Home இலங்கை சமூகம் இலங்கையில் வாகனங்களின் விலை உயர்வு! புதிய வரி விதிப்புகளில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் வாகனங்களின் விலை உயர்வு! புதிய வரி விதிப்புகளில் அதிர்ச்சி தகவல்

0

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி விதிப்பின் பின்னர் இலங்கையில் (Srilanka) விற்பனை
செய்யப்படும் விலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஜப்பானில் சுமார் 7.4 மில்லியன் விலை கொண்ட டொயோட்டா ரேய்ஸ் (Toyota Raize) 1200
சிசி ஹைப்ரிட், இறக்குமதி செய்யும் போது 6.4 மில்லியன் வரி விதிக்கப்படுகிறது.

இலங்கைக்கு டொயோட்டா ரேய்ஸை இறக்குமதி செய்வதற்கான விலை சுமார் 13.8
மில்லியன் ரூபாய்களாகும், எனினும் அது உள்ளூர் சந்தையில் சுமார் 16.5 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை
செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்வதற்கான விலை

ஹோண்டா வெசல் எக்ஸின் விலை ஜப்பானில் 8.8 மில்லியன் ரூபாய்கள், அதற்கு வரியாக
9 மில்லியன் விதிக்கப்படுகிறது.

எனவே, வெசல் எக்ஸ் இறக்குமதி செய்வதற்கான விலை
17.8 மில்லியன் ரூபாயாகும்
எனினும் அது இலங்கையில் 21 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தாய்லாந்திலிருந்து வரும் டொயோட்டா ஹிலக்ஸ் ஜிஆர் ஸ்போர்ட்டின் இறக்குமதி
செலவு 15 மில்லியன் செலவாகும், இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது 13
மில்லியன் வரி விதிக்கப்படுகிறது.

வரிக்குப் பிறகு, டொயோட்டா ஹிலக்ஸ் இறக்குமதியின் விலை 28.5 மில்லியன், ஆனால்
அது இலங்கையில் சுமார் 32 மில்லியனுக்கு விற்கப்படுகிறது.

மொத்த இறக்குமதி செலவு 

ஜப்பானில் இருந்து 6.5 மில்லியன் மதிப்புள்ள டொயோட்டா யாரிஸ் கிராஸக்கு,
இறக்குமதி செய்யும் போது 8.9 மில்லியன் வரி விதிக்கப்படுகிறது.

எனவே அதன்
மொத்த இறக்குமதி செலவு 15.4 மில்லியன் ஆகும், ஆனால் அது இலங்கையில் 19.5
மில்லியனுக்கு விற்கப்படுகிறது.

அத்தோடு, டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 250, வாகனம் 18 மில்லியன் ரூபாய்களுக்கு
இறக்குமதி செய்யப்பட்டு, வரிக்கு பின்னர் இலங்கையில் 65 மில்லியனுக்கு விற்பனை
செய்யப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version