Home ஏனையவை வாழ்க்கைமுறை மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டம்

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டம்

0

ஜப்பான் (Japan) நாட்டில் மக்கள் பதற்றம், மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு புதிய சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் யமகட்டா மாகாணம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது.

உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அம்மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதயப் பாதிப்பு 

அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக யமகட்டா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.

மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ளிட்ட தீவிரப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஜப்பானின் இந்தச் சிரிப்புச் சட்டம் தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

சிரிக்கும் சட்டம் 

மேலும், இதயப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலரால் மருத்துவக் காரணங்களால் சிரிக்க முடியாமல் போகலாம். அவ்வாறான சூழலில் இச்சட்டம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் வேலை செய்யும் இடங்களிலும் சிரிப்பு நிறைந்த சூழலை உருவாக்குவதற்கும் ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாளை “சிரிப்பு தினமாக” கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை “சிரிப்பதா வேண்டாமா என்பது அரசியல் சாசனத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை” என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version