Home இலங்கை சமூகம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் திருகோணமலைக்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் திருகோணமலைக்கு விஜயம்

0

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இஸொமாடா அகியோ (Isomata Akio) திருகோணமலை – சம்பூர் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்றைய (20) இந்த விஜயத்தின் போது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்ட சம்பூர் – பெரிய குளத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த குளமானது 9.4 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டிருந்தது.

மகஜர் கையளிப்பு 

இக்குளத்தின் புனரமைப்பு பணிகளை பீஸ் வின் ஜப்பான் (peace wind’s Japan) நிறுவனம் மேற்கொண்டு இருந்தது.

மேலும் சம்பூரிலுள்ள ஏனைய இரண்டு குளங்களை புனரமைப்பு செய்வதற்காக சம்பூர் கமநல சேவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் ஜப்பான் தூதுவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version